சென்னை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம்
1 min read
Awareness drive from Chennai to Kanyakumari
11.4.2026
தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பசியில்லா தமிழகம் மற்றும் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோஸியேசன் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு என்ற உறுதிமொழியுடன்
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சென்னை கலங்கரை விளக்கம் முதல் கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் வரை தொடர் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பயணமானது எந்த அரசியல் கட்சியைச் சாராமலும், எந்த மதத்தை சாராமலும் 100% வாக்குப்பதிவை மட்டுமே முன்னிறுத்தி விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளது.
சென்னை கலங்கரை விளக்கத்தில் தொடங்கிய இந்த பயணத்தில் தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோசியேசன் மாநில தலைவர் எம்.எஸ் பஷீர் அகமது, துணைத் தலைவர் எஸ்.சுலைமான், மாநில செயலாளர் ஜே.சாகுல், மற்றும் தென்காசி மாவட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கத்தலைவர் பி.மாரியப்பன், பசியில்லா தமிழகம் நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பயணத்தை மத்திய அரசின் நிரந்தர வழக்கறிஞர் ஆர். ராஜேஷ் குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சென்னையில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பயணம் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் பயணமாக சென்று மக்களிடம் 100% வாக்குப்பதிவை நிறைவேற்ற வேண்டிய உறுதிமொழி எடுத்து இறுதியாக கன்னியாகுமரியில் பயணத்தை நிறைவு செய்கிறது.