தென்காசில் தேர்தல் பற்றிய தகவல் பெற, புகாரளிக்க கட்டுப்பாட்டு அறை
1 min read
Control room to receive information and report on the Tenkasi elections
12.4.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கும், புகார் தெரிவிப்பதற்கும், வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். மேற்படி கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்களை செயலியின் மூலம், தேர்தல் பொதுமக்கள் நடத்தை உடனுக்குடன் புகாரளிக்கலாம். இந்த செயலியில் புகைப்படங்கள். வீடியோக்கள் மற்றும் நேரடி இருப்பிடத்துடன் (Live location) புகார்களை பதிவு செய்ய முடியும்
கட்டணமில்லா புகார் தெரிவிக்க 18004258375, 1950
இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்பு கொண்டு, சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம். புகார்களை பதிவு செய்யலாம்.
04633 1950 இந்த எண் மூலம் 24 மணி நேரமும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வாக்காளர் பட்டியல் செவித்திறன் தொடர்பான விவரங்களைக் கேட்டுப் பெறலாம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி
9944064485 இந்த எண்ணில் வாக்காளர்கள் கைபேசி எண்ணில் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு சைகை மொழிபெயர்ப்பு ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை கேட்டு பெறலாம்
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான விவரங்களை பெறுவதற்கு மேற்கண்ட சேவை கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்துள்ளார்.