பொட்டல்புதூரில் சசிகலா பிரசாரம்
1 min read
Sasikala campaigning in Pottalputhur
12.4.2026
அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.கே. சசிகலா பொட்டல்புதூரில் தேர்தல் பரப்புரை செய்தார்.
வருகிற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வி.கே. சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பசும்பொன் மக்கள் தேசம் கட்சி சாத்தூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் வேட்பாளர் மாடசாமியை ஆதரித்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் பொட்டல்புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.கே. சசிகலா தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
நான் சிறைக்கு செல்வதற்கு முன் எடப்பாடி பழனிசாமி இடம் கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து சென்றேன். நான்கு வருடங்களுக்குப் பிறகு நான் சிறையிலிருந்து வெளியில் வரும்போது கட்சியை ஆட்சியையும் இல்லாமல் செய்து விட்டார். கட்சியை விட்டு சென்ற அனைவரையும் இணைத்து கட்சியை வளர்ப்பாரென்று நான்கரை ஆண்டுகள் காத்திருந்தேன். திமுக அரசு மக்களுக்கு எதிரான வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது எடப்பாடி பழனிசாமி அதை எதிர்க்கவில்லை. அவருடைய குடும்பத்தை மட்டும் பாதுகாக்க கட்சியை பயன்படுத்திக் கொண்டார். எனவே தான் துரோகிகளை வீழ்த்த நானே களமிறங்கி உள்ளேன். போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் எதிரிகளுக்கு பாடம் புகட்டி வெற்றி பெறுவோம் என பேசினார்.
கூட்டத்தில் சசிகலாவிற்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பசும்பொன் மக்கள் தேசம் கட்சி வேட்பாளர் மாடசாமி வீரவாள் நினைவுப் பரிசாக வழங்கினார்.
ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பரப்புரைக் கூட்டத்தில் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கருணாகர பாண்டியன்,
மாநில துணை பொதுச்செயலாளர் பேச்சிமணி பாண்டியன்,
மாநில பொறுப்பாளர் ரமேஷ் பாண்டியன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மகாராஜ பாண்டியன், தென்மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் மகேந்திர பாண்டியன், மாநில இளைஞரணி செயலாளர் சுந்தரபாண்டியன், தென்மண்டல இளைஞரணி செயலாளர் பேச்சிமுத்து, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ராசுத்தேவர் கோவை மாவட்ட செயலாளர் மேகநாதன், கன்னியாகுமாரி மாவட்ட அமைப்பாளர் துரைப்பாண்டியன்,
நெல்லை மாவட்ட செயலாளர் முருகேச தேவர்,
தெற்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெமினி முத்து, நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ் தேவர்,
தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் கண்ணன் பாண்டியன்,
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிப்பாண்டியன் கீழப்பவூர் ஒன்றிய செயலாளர் இசக்கி மாரி, கடையம் ஒன்றிய பொறுப்பாளர் மாடசாமி, துப்பாக்குடி முப்பிலிபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.