June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி – ஆட்சியர் தகவல்

1 min read

Facility for differently-abled and senior citizens to vote from home – Collector information

12.4.2026

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வகையில் அதிகாரிகள் அந்தந்த வீடுகளுக்கு சென்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக 85 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதியினை ஏற்படுத்திட தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளர்களிடம் வாக்குப் பதிவு செய்யும் அலுவலர்கள் குழு இன்று (12.04.2026) முதல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். வாக்குப் பதிவு செய்யும் அலுவலர்கள் குழுவினர் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள அனைவரிடமும் வாக்குகளை பெறவுள்ளனர் 61601 மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *