இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்; அண்ணாமலை பேச்சு
1 min read
This is an election for regime change; Annamalai speech
12.4.2026
காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணாமலை பேசியதாவது: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் அவரது மகனும் எம்-.பி.,யுமான கார்த்தி இருவரும், காரைக்குடி தொகுதியை மொத்தமாக பிடித்து வைத்து உள்ளனர்.
மாங்குடி எம்.எல்.ஏ., என சொல்வதை விட, சிதம்பரம் குடும்பத்தின் பி.ஏ., என்று சொல்லலாம். வேட்பாளர்களுக்கு காரைக்குடி சாப்பாடு போட்டு அனுப்புங்கள் என கார்த்தி எம்.பி., சொல்கிறார். நீங்கள் ஒழுங்காக வேலை செய்திருந்தால் எதற்காக மற்றவர்கள் வந்து, இங்கு போட்டி போடப்போகிறார்கள்.
காங்., கட்சியால் எந்த பயனும் இல்லை, மக்களும் அந்த கட்சியை விரும்பவில்லை, கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது, காங்கிரஸ். தமிழகத்தில் பிரசாரத்திற்காக, ராகுல் வந்ததே இல்லை.
இந்த தேர்தல் பிடித்த தலைவர்களுக்கு ஓட்டு போடும் தேர்தல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். காலம் வரும்போது அவர்களுக்கு ஓட்டு போடலாம். இப்போது, தி.மு.க., ஆட்சி வெளியேற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்
காரைக்குடியில் அண்ணாமலை பேசியதாவது:-
ஒரு வங்கியின் 4 ஏடிஎம் காட்டி, நான் நிதியமைச்சராக இருந்த போது ஏடிஎம் திறந்தேன் என கடந்த 15 ஆண்டுகளாக ஒரே ஒரு விஷயத்தை பேசி கொண்டு இருக்கிறார். காரைக்குடி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் தான் இந்த வளர்ச்சியை நோக்கி ஓட்டளிக்க வேண்டும். சிதம்பரம் குடும்பத்தினர் மக்களுக்கு எதையும் செய்யாமல் வெட்கம் இல்லாமல் ஓட்டு கேட்கிறீர்கள், உங்களை என்ன சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
காரைக்குடியில் பார்த்தேன். இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் ரோடு ஷோ நடந்தது.வண்டியின் மேல உட்கார்ந்து கை காட்டுவது அரசியல் இல்லை. வெயிலில் மக்கள் எப்படி இருக்கிறார்களோ, அவர்களுடன் இருக்க வேண்டும். காமராஜர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். 9ஆண்டு அவர் சிறையிலும் இருந்து இருக்கிறார். காமராஜரின் மொத்த வாழ்க்கையில் 9 ஆண்டு காலம் சிறையில் இருந்து இருக்கிறார். கஷ்டத்தை பார்த்து இருக்கிறார். இன்றைக்கு வரும் எந்த அரசியல்வாதியையும் நான் தவறாக சொல்லவில்லை.
இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள். 18 வயதில் ஓட்டு போடக்கூடிய இளைஞர்கள் 17 லட்சம் பேர் இருக்கின்றனர். தேர்தல் வரலாற்றில் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் இருக்கக்கூடிய தேர்தல் இது.
20 வயதில் இருந்து 29 வயது வரைக்கும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் இருக்கிறீர்கள். 29 வயதிற்கு கீழ், ஒரு கோடியே 28 லட்சம் பேர் இந்த முறை ஓட்டு செலுத்த இருக்கிறார்கள். இளைஞர்கள் பட்டாளத்திற்கு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மாற்றம் என்பது உங்களுக்காக தான் பேசிக் கொண்டு இருக்கிறோம். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கடந்த தேர்தல் அறிக்கையின் ‘கட், காப்பி, பேஸ்ட். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.