August 4, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது

1 min read

Janyayan movie leaked online: 6 people arrested

1.4.2026
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய், எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்தி ருந்தார். இந்த படம்தான் தனது கடைசி படம் என்று அறி வித்து இருந்தார். எனவே இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண் டிகைக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் இந்த படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதனால் பட வெளியீடு தள்ளிப்போனது. இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை நாடியது. பின்னர் வழக்கை வாபஸ் பெற்று மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பியது. சட்டமன்ற தேர்தல் வேறு வந்து விட்டதால் தேர்தலுக்கு பிறகே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே ஜனநாயகன் படத்தின் 5 நிமிடங்கள் ஓடக்கூடிய சண்டை காட்சிகள் கடந்த சில தினங்களுக்குமுன்பு சமூக வலைத்தளத்தில் கசிந்தன.இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் முழுபடமும் நேற்று முன்தினம் வெளியானது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் படம் இணையதளத்தில் வெளியானது திட்டமிட்டு நடந்ததா? அல்லது தற்செயலாக நடந்ததா? என கேள்விகள் எழுந்தன. பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானது விஜய் ரசிகர் கள், த.வெ.க. தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படம் வெளியான விவகாரத்தில், தணிக்கை வாரியத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது.

இதற்கிடையே, ஜனநாயகன் படம் கசிந்த விவகாரத்தில் தமிழக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் படத்தை முதன் முதலாக கசியவிட்டவர்களா? அல்லது பகிர்ந்தவர்களா? என்ற விவரம் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த விரிவான அறிக்கையை சைபர் கிரைம் போலீசார் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *