பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி : வாக்கு சேகரித்தார்.
1 min read
MK Stalin walks in Paramakudi: Collects votes.
12.4.2026
தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்
தொடர்ந்து 4-ம் கட்ட பிரசாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் 10-ந்தேதி தொடங்கினார். பின்பு 11ந் தேதி மாலை புதுக்கோட்டை, திருப்பத்தூர் பொதுக் கூட்டங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவிட்டு இரவு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கினார்.
பின்பு இன்று 12 ம்தேதி காலை 7 மணியளவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நடைபயிற்சியை பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தொடங்கினார்.
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பரமக்குடி நகரில்
ஆர்ச் பகுதி,காந்தி சிலை,பெரிய கடை வீதி ஆகிய பகுதிகளில் கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்கள், வியாபாரிகளிடம்
தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது சாலையின் இருபுறமும் கூடியிருந்த பொதுமக்கள் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த போது அவர்களிடம் உற்சாகமாக உரையாடி வாக்குகள் சேகரித்தார்.அதுசமயம் சாலையோரம் பெண் ஒருவர் வைத்திருந்த குழந்தையை மு.க.ஸ்டாலின் வாங்கி மகிழ்ச்சியுடன் வாக்கு சேகரித்தார்.
அதன் பின்பு அப்குதியில் இருந்த தேநீர் கடையில் தேனீர் அருந்தினார்.பெரிய கடை வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் பகுதியில் உள்ள ஆண்கள்,பெண்கள்,காய்கறி வியாபாரிகளை சந்தித்து விக்குகள் சேகரித்தார்.தொடர்ந்து மீன்கடை பகுதிக்கு சென்று மீன் வியாபாரிகள் சந்தித்து மீன்களின் விலைகளை கேட்டறிந்து
சேகரித்தார். தொடர்ந்து மீன் வாங்க வந்திருந்த பொதுமக்கள், சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்பு அங்கிருந்து தனது வாகனத்தில் புறவழிச் சாலை வழியாக எமனேஸ்வரம் சென்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த நெசவாளர் சாந்தாராம் வீட்டிற்கு சென்று கைத்தறி நெசவு நெய்வதை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.முதல் அமைச்சர் நெசவாளர் வீட்டில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினார். பின்பு வெளியில் வந்த வீதியில் கைத்தறி நெசவாளர்கள் கைத்தறி நூல் சிக்கெடுக்கும் (அல்லு நீட்டுதல்)பணியினை பார்வையிட்டு அப்பணியில் தானும் ஈடுபட்டு நெசவாளர்களிடம் வாக்குகள் சேகரித்தார். எமனேசுவரம் கைத்தறி நெசவாளர் வீடு ஒன்றில் நெசவு பணியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு எமனேசுவரத்தில் கூடியிருந்த நெசவாளர்களும் பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
எமனேஸ்வரத்தில் இருந்து இளையான்குடி ரோடு வழியாக வைகைநகர், ஆற்றுப்பாலம், மேலச்சத்திரம்,ஐந்துமுனை பகுதிகளில் சாலையோரம் நின்றிருந்த மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
பரமக்குடியில் இன்று காலை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 1 1/2 மணிநேரம் நடைபயிற்சியின் போது
வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தனியார் தங்கும் விடுதிக்கு திரும்பிய மு.க. ஸ்டாலின்,நகரின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பரமக்குடி சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் கே.கே.கதிரவனுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.