காரைக்கால் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
1 min read
Sri Lanka Navy arrests 12 Karaikal fishermen
12.4.2026
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி அத்துமீறி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை சிறைபிடித்து சென்றது.
சிறைபிடித்த 12 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.