August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா விளம்பரங்களுக்கு ரூ.76 லட்சம் செலவிட்ட மத்திய அரசு

1 min read

Central government spent Rs. 76 lakh on RSS centenary advertisements

17.4.2026
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு பல்வேறு அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்காக ரூ.76.13 லட்சம் செலவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் மத்திய அரசு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவிற்காகச் செய்த மொத்தச் செலவுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து அஜய் வாசுதேவ் போஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரின் மனுவிற்குப் பதிலாக, மத்திய அமைச்சகம் விளம்பர செலவு விவரங்களை மட்டும் வழங்கியுள்ளது.

அதன்படி ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் செய்தித்தாள்கள் மற்றும் இதர அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் செய்ததற்காக ரூ.76,13,129 செலவிடப்பட்டுள்ளது.

இந்தச் செலவினங்களை மத்திய கலாச்சார அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

அரசு,ஒரு தனி அமைப்பின் விழாவிற்கு விளம்பரச் செலவுகள் செய்வது அரசியல் தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *