June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தொகுதி மறுசீரமைப்புக்கு பின் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள்- அமித் ஷா வெளியிட்ட பட்டியல்

1 min read

List of constituencies for southern states after constituency reshuffle – Amit Shah releases list

17.4.2026
பாராளுமன்ற மக்கள் அவையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு எத்தனை தொகுதிகள் கூடும் என்ற பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்களுக்கு அதிக இழப்பு ஏற்படும் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இத்துடன் தொகுதி வரையறை மூலம் 850 தொகுதிகளாக அதிகரிக்கப்படும் போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கூடும் என்பது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார். மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த மசோதா மீதான விவாதம் அவையில் நடந்தது. இந்த விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடியும் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, தொகுதி வரையறை மூலம் 850 தொகுதிகளாக அதிகரிக்கப்படும் போது எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு கூடும் என்பது தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

அமித் ஷா கூறுகையில், “தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 தொகுதிகளும், கேரளாவிற்கு கூடுதலாக 10 தொகுதிகளும், தெலுங்கானாவிற்கு கூடுதலாக 9 மற்றும் ஆந்திராவிற்கு கூடுதலாக 13 தொகுதிகளும் கிடைக்கும் என்றார். மகாராஷ்டிராவிற்கு கூடுதலாக 24 தொகுதிகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி தமிழ்நாட்டிற்கு தற்போது 39 தொகுதிகள் உள்ள நிலையில் தொகுதி மறுவரையைறைக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 59 ஆக மாறும். இதேபோல் கேரளாவில் தற்போதுள்ள 20 தொகுதிகள் மறுசீரமை்புக்கு பிறகு 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகள் 38 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும் என்றார்.

மக்களவையில் பேசிய அமித்ஷா, தமிழகத்திற்கு எந்த வித இழப்பும் ஏற்படாது. மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநித்துவம் 7.23 சதவீதம் ஆக அதிகரிக்கும். தென் மாநிலங்களில் மட்டும் தற்போது 129 தொகுதிகள் உள்ளன. இதன் தற்போதைய சதவீதம் 23.76 சதவீதமாக உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தென் மாநிலங்களில் ஒட்டு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 23.97 சதவிகிதமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பிறகே அமல்படுத்தப்படும். 2029-க்கு முன் அது நிறைவேற்றப்படும் என்றில்லை. அதுவரையில் நடைபெறும் எல்லா தேர்தல்களும் தற்போது இருக்கும் இடங்களின் எண்ணிக்கையிலையே நடைபெறும் என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *