இரட்டை குடியுரிமை விவகாரம்: ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை
1 min read
Dual citizenship issue: Interim stay on filing of FIR against Rahul Gandhi
19.4.2026
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி, இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாகவும், அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கோரி கர்நாடக பா.ஜனதா நிர்வாகி விக்னேஷ் சிஷிர் என்பவர் அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பா.ஜனதா தரப்பு மனுதாரரின் இந்த மனு ஏற்கனவே கீழ்கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் ஐகோர்ட்டில் தன் தரப்பு வாதத்தை ஏற்க ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ அமர்வில் நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், ராகுல்காந்தி தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டியிருப்பதால் இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 20-ந்தேதி (இன்று) ஒத்திவைப்பதுடன், அவர் மீது எப்.ஐ.ஆர். பதிய ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த வெள்ளி அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அதிரடியாக நிறுத்தப்பட்டது. இதனால், ராகுல் காந்திக்கு இடைக்காலமாக நிவாரணம் கிடைத்துள்ளது.