June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை- மோடி நலம் விசாரித்தார்

1 min read

Pawan Kalyan undergoes surgery – Modi inquires about his well-being

19.4.2026
தெலுங்கு சினிமா நடிகரும் ஜனசேனா கட்சி தலைவரும் ஆனவர் பவன் கல்யாண். ஆந்திர துணை முதல்-மந்திரியாக உள்ள அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைபாடு காரணமாக தவித்து வந்தார். மேலும் கடுமையான முதுகுதண்டு பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, வெள்ளிக்கிழமை அமராவதியில் நடந்த கூட் டத்தின் போது உடல்நிலை மோசமடைந்தது.

பரிசோதனை மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின் அடிப்படையில் டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினர். அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை 7 முதல் 10 நாட்கள் வரை முழு ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அனைத்து பொதுப்பணிகளையும் ரத்து செய்திருந்தார்.

இந்நிலையில் பவன் கல்யாணின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ்வலைதளத்தில், “ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் அவர்களுடன் நான் தொலைபேசியில் பேசி, அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். அவர் மிகுந்த தைரியமும் வீரமும் கொண்டவர். பவன் கல்யாண் அவர்கள் விரைவில் குணமடைவார். அவர் முழுமையாக குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பிரதமரின் அன்பான வார்த்தைகளுக்கும், அவருடன் பேசி அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கும் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *