இரு இந்திய கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச்சூடு தாக்குதல்
1 min read
Iranian military fires on two Indian ships
19.4.2026
ஈரானுடன் 2 வார போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தது. இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்தது.
வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் லெபனான் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டதை அடுத்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை போக்குவரத்துக்கு திறந்துவிட்டது.
ஆனால் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்வதால் ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்துக்கு மீண்டும் தடை விதிப்பதாக ஈரான் அறிவித்தது.
இதனிடையே ஈராக்கிலிருந்து 20 லட்சம் பாரல் எண்ணெயுடன் ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தில் தாயகம் திரும்பிக்கொண்டிருந்த இரு இந்திய சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஈரானிய புரட்சிகர காவல்படை துப்பாக்கிப் படகுகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் முகமை உறுதிப்படுத்தியது.
தாக்குதல் எதிரொலியாக அவ்விரு இந்தியக் கப்பல்களும் திருப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்திய கப்பல்கள் மட்டுமின்றி மற்றும் சில எண்ணெய் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.