தமிழக சட்டசைப வேட்பாளர்களில் பணக்காரர்கள்
1 min read
Richest candidates in Tamil Nadu Legislative Assembly
19.4.2026
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக சொத்து கொண்ட வேட்பாளர்கள் பட்டியலையும் பல்வேறு விவரங்களையும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது.
தேசிய கட்சிகளில் 184 பேரது வேட்புமனுக்கள், மாநில கட்சிகள் 637 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் 979 மற்றும் 2192 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக வேட்பாளர்களில் கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் திமுக 170 பேர், அதிமுக 160 பேர், தவெக 156 பேர், காங்கிரஸ் 27 பேர் உள்ளனர்.
அதிக சொத்து உள்ள முதல் 10 வேட்பாளர்கள் பெயர் வருமாறு:-
1.லீமா ரோஸ் மார்ட்டின் (அதிமுக)- லால்குடி தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.5863 கோடி.

2.ஜோசப் விஜய் (தவெக) பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.648 கோடி.
3.ஆதவ் அர்ஜூனா (தவெக). வில்லிவாக்கம் தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.534 கோடி
4.இசக்கி சுப்பையா (அதிமுக) அம்பாசமுத்திரம் தொகுதி, இவருடைய சொத்து மதிப்பு ரூ.419 கோடி
5.கார்த்திக் மோகன் (திமுக). வில்லிவாக்கம் தொகுதி, இவருடைய சொத்து மதிப்பு ரூ.346 கோடி
6.மதியழகன் (திமுக) பர்கூர் தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.304 கோடி
7.ராஜேந்திரன் (திமுக) திருவள்ளூர் தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.259 கோடி
8.கே.ஆர்.ஜெயராம் (அதிமுக) சிங்காநல்லுார் தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.172 கோடி
9.நித்யானந்தன் (கொமதேக). பொள்ளாச்சி தொகுதி. இவருடைய
சொத்து மதிப்பு ரூ.170 கோடி.
10.ஆர்.எஸ்.முருகன் (தவெக) திருநெல்வேலி தொகுதி. இவருடைய சொத்து மதிப்பு ரூ.158 கோடி
ரூ.10 லட்சத்துக்கும் கீழ் சொத்து வைத்துள்ளவர்கள் -1371
ரூ.10 முதல் 50 லட்சம் வரை -1204
ரூ.50 லட்சம் முதல் 2 கோடி வரை -716 பேர்
ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 286 பேர்
ரூ.5 கோடிக்கு மேல் 415
தீவிர கிரிமினல் வழக்கு உள்ளவர்களில் தேசிய கட்சியில் – 14.
மாநிலகட்சி 138. பதிவு செய்யப்பட்ட கட்சி -148. சுயேச்சைகள் -103 பேர். தங்கள் மீது தீவிர வழக்குகள் உள்ளன என அறிவித்துள்ளனர். கட்சி வாரியாக குற்ற வழக்கு உள்ளவர்கள்
அதிமுக – 118 பேர், தவெக -92 திமுக – 70 பாஜக -16, காங்கிரஸ் -14, பாமக -9, தேமுதிக – 5, இந்திய கம்யூனிஸ்ட் -3
மார்க்சிஸ்ட் – 4 பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என அறிவித்துள்ளனர்.
மிக தீவிரமான குற்றவழக்குகள் அதிமுக -60 பேர் தவெக 43 பேர் திமுக -32 பேர் பாஜ-9 பேர் காங்கிரஸ் 5 பேர், பாமக 6 பேர்
தேமுதிக 1 பேர், இந்திய கம்யூனிஸ்ட் -1 பேர் தங்கள் மீது தீவிரமான குற்றவழக்குகள் உள்ளன என தெரிவித்துள்ளனர்.
பட்டப்படிப்பு – 1822 பேர்
டிப்ளமோ முடித்தவர்கள் -301
படிக்காதவர்கள் – 95 பேர்
7 பேர் கல்வி தகுதி குறித்து தகவல் கொடுக்கவில்லை.
பெண் வேட்பாளர்கள் சட்டசபை தேர்தலில் 442 பெண்கள் போட்டியிடுகின்றனர். சுயேச்சை – 149 ,நா தக -117, தவெக- 24 அதிமுக-21, திமுக -19, பகுஜன் சமாஜ் கட்சி -15, சசிகலா கட்சி -14 தவாக-12, பாஜ-6, புதிய தமிழகம்-5, பாமக -3, காங்கிரஸ், விசிக சார்பில் தலா -2, தேமுதிக -1 களமிறங்கி உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் வயது முதிர்ந்தவர், 87 வயதான அமைச்சர் துரைமுருகன். அடுத்தடுத்த இடங்களில் நாகர்கோவில் பாஜ வேட்பாளர் காந்தி, 81, ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் அமைச்சர் காந்தி, 80 ஆகியோர் உள்ளனர்.