விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
1 min read
Vijay – Sangeeta divorce case postponed
20.4.2026
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த சில ஆண்டுகளாகப் பொது நிகழ்ச்சிகளில் தென்படாதது குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனு இன்று (ஏப்ரல் 20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சங்கீதா தாக்கல் செய்த மனுவில் நடிகர் விஜய் மீது மிக முக்கியமான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்
விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும், அதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, 2021-ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் வசித்தாலும் இருவரும் தனித்தனியாகவே வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
விஜய்யிடமிருந்து ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அந்த நடிகை யார் என்கிற விவரங்களை நீதிமன்றத்தில் பகிரங்கமாக வெளியிட நேரிடும் என்றும் தனது மனுவில் அவர் எச்சரித்தார்.
இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராக ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜயும் சங்கீதாவும் காணொலி காட்சி வழியாக கோர்ட்டில் ஆஜராவார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் விஜய், சங்கீதா ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.