திருச்செந்தூர் முருகன் கோவிலில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சாமி தரிசனம்
1 min read
Union Minister Rajnath Singh visits Murugan Temple in Tiruchendur
19.4.2026
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தென் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று திருச்செந்தூர் சென்றார். அவர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.