மலை கிராமங்களுக்கு குதிரைகள் வாயிலாக சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்
1 min read
Voting machines carried by horses to mountain villages
22/4/2026
தேனி மாவட்டம் கொட்டகுடி, அகமலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு குதிரைகள் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
போடி சட்டசபை தொகுதியில் கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், காரிப்பட்டி, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி ஊத்துக்காடு மலை கிராமங்கள் உள்ளன.
சென்ட்ரல் ஸ்டேஷன் மலை கிராமத்தில் 75, முதுவாக்குடியில் 53, காரிப்பட்டியில் 108, அகமலையில் 553, ஊரடி ஊத்துக்காட்டில் 310, கண்ணக் கரையில் 188 வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள 6 ஓட்டுச்சாவடிகளுக்கு போடியில் இருந்து ரோடு வசதி இல்லை.
இதனால் குரங்கணியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும், 13 கி.மீ., தொலைவில் உள்ள காரிப்பட்டிக்கும் மண்டல அலுவலர் முனிராஜ் தலைமையில் குதிரைகள் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இதேபோல் ஊரடி ஊத்துக்காடு கிராமத்திற்கு பெரியகுளம் கண்ணக்கரை வழியாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் குதிரைகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.