சென்னை – நெல்லை இடையே முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் ரெயில்
1 min read
Unreserved MEMU Express train between Chennai and Nellai
24.4.2026
கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை – நெல்லை இடையே முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 25-ந் தேதி (நாளை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஏப்ரல் 26-ந் தேதி (நாளை மறுநாள்) மதியம் 1.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.