June 19, 2026

Seithi Saral

Tamil News Channel

தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் டிஎஸ்பி உயிரிழப்பு

1 min read

Ramanathapuram DSP dies while engaged in election work

24.4.2026
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளிமாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாருக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் தொகுதி கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டாா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், இடைகோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து, ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா், அங்கு உயிரிழந்தாா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *