June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

மனைவி கண்டித்ததால் கள்ளக்காதலியுடன் டிரைவர் தற்கொலை

1 min read

Driver commits suicide with girlfriend after wife reprimands him

28.4.2026
கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாளா அருகே உள்ள சினேகபுரி பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீஜித் (வயது 30). டிரைவர். இவரது மனைவி அஞ்சனா (26). இவரது தோழி திருச்சூர் வென்னூர் பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகள் மில்னா (24). பாபு பேக்கரி நடத்தி வருகிறார். மில்னா தனது தோழியான அஞ்சனா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அவ்வாறு சென்று வந்ததால் அவருக்கும், ஸ்ரீஜித்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த அஞ்சனா தனது கணவரையும், மில்னாவையும் கண்டித்ததுடன், அவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், அஞ்சனாவை ஸ்ரீஜித் தாக்கியுள்ளார். அதன் பின்னரும் ஸ்ரீஜித்தும், மில்னாவும் நெருங்கி பழகி வந்தனர்.

இதனால் மனமுடைந்த அஞ்சனா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் மில்னாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனாலும், அவர் ஸ்ரீஜித் உடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. கடந்த 24-ந் தேதி பேக்கரியில் இருந்து சென்ற மில்னா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பாபு மாளா போலீசில் புகார் அளித்தார். போலீசார் மில்னாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, ஸ்ரீஜித் வீட்டில் இருப்பதாக காட்டியது. உடனே போலீசார் அங்கு சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப் பட்டு இருந்தது. பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மில்னா, ஸ்ரீஜித் ஆகிய 2 பேரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

2 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சாலக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேரும் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், கள்ளக்காதலை கண்டித்த அஞ்சனா தற்கொலைக்கு முயன்றது எங்களை மனதளவில் பாதித்தது.

இனி வாழ விரும்பவில்லை. இதனால் நாங்கள் ஒன்றாக இறக்க போகி றோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *