சிறுவர் – சிறுமிகளுடன் கால்பந்து விளையாடிய பிரதமர் மோடி
1 min read
Prime Minister Modi played football with boys and girls
28.4.2026
சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, காங்டாக்கில் நேற்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி,2 நாள் பயணமாக சிக்கிம் மாநிலம் காங்டாக்கிற்கு நேற்று சென்றார். அப்போது அவரை சிக்கிம் மாநில ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர், முதல்-மந்திரி பிரேம் சிங் தமாங் ஆகியோர் நேரில் வரவேற்றனர்.
அப்போது மோடி, சிக்கிம் மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி, கோட் அணிந்திருந்தார்.
இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். சிக்கிமில் நடைபெறவுள்ள ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், நேற்று காலை இங்கு சில சிறுவர் சிறுமியருடன் கால்பந்து விளையாடியது “புத்துணர்ச்சியை அளித்தது” என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இனிமையான காங்டாக் காலையில், சிக்கிமில் உள்ள எனது இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதை போல் வேறு எதுவும் இல்லை. இந்த இளைஞர்களுடன் இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் கால்பந்துப் பயிற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறுஅதில் பதிவிட்டுள்ளார்.
பின்னணியில் லோக் பவன் கட்டிடம் தெரியும் வகையில், மோடி விளையாட்டு வீரர்களுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.