June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒடிசாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

1 min read

Earthquake in Odisha; 4.1 on Richter scale recorded

29/4/2026
ஒடிசாவின் கலஹண்டி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 7.42 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

24 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.729 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 82.599 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

முன்னதாக, மணிப்பூரில் இன்று காலை 11.28 மணியளவில் ரிக்டர் 3.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேகாலயாவிலும் இன்று மதியம் 1.28 மணியளவில் ரிக்டர் 2.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *