June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

1 min read

Oxford Public Senior Secondary School, Kuthukkalwalasai, 100 percent pass rate

28.4.2026
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்று ஏ1 கிரேடில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் தி. முகமது யூனஸ் 97% மதிப்பெண்களுடன் அனைத்து பாடங்களிலும் ஏ1 .கிரேடு பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்.இவர். தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் மு. சகரியா என்ற மாணவன் 94% மதிப்பெண் பெற்று அனைத்து பாடங்களிலும் ஏ1 கிரேடு பெற்று பள்ளியில் இரண்டாமிடம் பெற்று தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மேலும் இதே பள்ளி மாணவி இ. ஐஸ்வர்ய லெட்சுமி 94% மதிப்பெண் பெற்று அனைத்து பாடங்களிலும் ஏ1 கிரேடு பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.. மேலும் இவர் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் இந்த பள்ளியில் தமிழில் ஐந்து மாணவ மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான க. திருமலை, பள்ளி தாளாளர், அன்பரசி திருமலை இயக்குநர் ஜோசப் லியாண்டர், சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால் சுசி சோ. சௌம்யா மற்றும் சீனியர் முதல்வர் ஆ. ஜெய ஜோதி பிளாரன்ஸ், முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *