June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

கோடை காலத்தில் தோட்டக்கலை பயிர்கள் பாதுகாப்பு பற்றி தென்காசி ஆட்சியர் விளக்கம்

1 min read

Tenkasi Collector explains about the protection of horticultural crops during summer

30.4.2026
தென்காசி மாவட்ட விவசாயிகள் கோடை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாத்துக் கொள்வது மற்றும் விளைச்சல் பாதிப்படையாமல் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது :-

தென்காசி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சுமார் 30,000 ஹெக்டர் பரப்பளவில் மா, எலுமிச்சை. வாழை, வெங்காயம், தக்காளி, கத்திரி வெண்டை தென்னை, மல்லிகை, சம்பங்கி மற்றும் இன்னும் பல்வேறு தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அதிகரித்து வரும் அதிக வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தோட்டக்கலைப்பயிர்களை பாதுகாத்துக் கொள்வது மற்றும் விளைச்சல் பாதிப்படையாமல் தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள்.

வாழை பயிரில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் நீரை சிக்கனமாக பயன்படுத்த முடியும். வாழைக் கிழங்குகளை அசோஸ் பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா உயிரி உரங்களால் நனைத்து நடவு செய்ய வேண்டும். செடிகளின் வேர் பகுதியில் மூடாக்கு செய்வதன் மூலம் ஆவியாகும் நீர் இழப்பு குறையும். மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.

காய்கறி மற்றும் ஓராண்டு பயிர்களில் நிலத்தை உழவு செய்து மென்மையாக வைத்தல், களை கட்டுப்பாடு, வறட்சியைத் தாங்கும் பயிர்களை பயிரிடுதல் நிழல் வலைகளைப் பயன்படுத்துதல், சரியான இடைவெளி விட்டு நடவு செய்தல், மூடாக்கு அமைதல், உயிர் உரங்கள் இடுவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

மா. எலுமிச்சை, தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் உலர்ந்த இலைகள் வைக்கோல் போன்றவற்றை செடியின் அடிப்பகுதியில் பரப்புவதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் நீண்ட நேரம் பாதுகாக்கப்படும் ஆவியாவதன் மூலம் ஏற்படும் நீர் இழப்பு குறையும். வறட்சி காலத்தில் மண் வழியாக உரமிடுவதை தவிர்க்க வேண்டும். 2% DAP % KCI இலை வழியாக தெளிப்பதன் மூலம் செடிகள் நேரடியாக ஊட்டச்சத்தை உறிஞ்சும் வறட்சியில் வளர்ச்சியை தக்கவைக்க உதவும் Zinc, Boron போன்றவை அளிப்பதன் மூலம் செடிகளில் வறட்சியைத் தாங்கும் திறனை அதிகரிக்கலாம்.

கோடைக்கால உழவு செய்தல் மூலம் பெய்யும் மழைநீரை சேமிக்க இயலும். விவசாயிகள் இப்பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் தோட்டக்கலை பயிர்களில் நல்ல மகசூல் பெறலாம்.

இவ்வாறுமாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *