பாட்டாக்குறிச்சி அன்னை முதியோர் இல்லத்தில் திருட்டு
1 min read
Theft at Pattakurichi Mother’s Nursing Home
30.4.2026
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழ்ப்பாட்டாக்குறிச்சி பகுதியில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் புகுந்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது பற்றி முதியோர் இல்லத்தின் நிர்வாகி பி. ராஜேந்திரன் சிசிடிவி காட்சிகளுடன் சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
தென்காசி அருகே உள்ள கீழப்பாட்டாக்குறிச்சி
கிராமத்தில் அன்னை முதியோர் இல்லம் 2017 முதல் இயங்கி வந்த நிலையில் கிருமி தாக்கு நோய் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதன் காரணமாக முதியோர் இல்லம் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 16.04.2026 மதியம் 2.20 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே புகுந்து திருடிய நிலையில் மீண்டும் 26.04.2026 அன்று 9.30 மணியளவில் மற்றொரு நபரோடு சேர்ந்து வேலியைத் தாண்டி வந்து கதவு, பீரோ, ஆபிஸ் ஆகிய இடங்களில் பணம் மற்றும் பல பொருட்களை திருடிவிட்டு வேலியைத் தாண்டி சென்று விட்டார்கள்.
இதுபோல பலப்பொருட்கள் திருட்டு போய் விட்டது சிசிடிவி கேமரா காட்சிகள் ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. தங்களிடம் ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம்.
எனவே மீண்டும் மீண்டும் அந்த நபர் திருடி வரும் நிலையில் அந்த நபர்களை கண்டு பிடித்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்வ தோடு எங்கள் பொருட்களை மீட்டுத்தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபர்கள் பட்டப் பகலில் முதியோர் இல்லத்திற்குள் வேலியைத் தாண்டி உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி செல்லும் சி சி டிவி காட்சிகளையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.