June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட காவல் துறை மூலம் 203 வாகனங்கள் பொது ஏலம்

1 min read

203 vehicles auctioned by Tenkasi District Police Department

6/5/2026
தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 203 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏல அறிவிப்பு.

தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 03 மூன்று சக்கர வாகனங்களும் 02 நான்கு சக்கர வாகனங்களும் மற்றும் மதுவிலக்கு குற்றவழக்கில் தொடர்புடைய 01 இருசக்கர வாகனம் என மொத்தம் மொத்தம் 203 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் வரும் 13.05.2026 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை 09.05.2026-ஆம் தேதி முதல் 12.05.2026-ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நேரில் பார்வையிடலாம், மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூபாய் 3000/- முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத்தெகையுடன் GST தொகையினையும் சேர்ந்து ரொக்கமாக உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இத்தகவலை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில்வாகனன் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு 94884-88933, 9629919033, 9498140002 என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *