June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

இசெட்-பிரிவு பாதுகாப்பு வேண்டாம்: மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை கடிதம்

1 min read


No need for Z-section security: Annamalai letter to Union Home Ministry

6.6.2026
பா.ஜ.க.வில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்க உள்ள அண்ணாமலை அடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டேர் இணைந்துள்ளனர்.

இதனிடையே, தனக்கு வழங்கப்படும் Z- பிரிவு பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். மேலும் அக்கடித்தத்தில் மாநில அரசின் பாதுகாப்பு மட்டும் போதுமானது என குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை தான் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அண்ணாமலை கடிதம் அனுப்பியுள்ளதால் விரைவில் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதால் Z பிரிவு பாதுகாப்பு திரும்பப்பெறப்படும் என்று கூறப்படுகிறது.

பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்து வந்த காலத்தில் இருந்தே அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *