June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லுாரில் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

1 min read

Providing welfare assistance to the elderly in Kadayanallur

6.5.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லுார் பவ்டா கிளை எல்கைக்குட்பட்ட கீழதிருவேட்டநல்லுார் கிராமத்தில் வைத்து பவ்டா குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ஜாஸ்லின்தம்பி 73வது பிறந்தநாள் விழா மற்றும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பவ்டா குழுமத்தின் நிறுவனா் டாக்டர்ஜாஸ்லின்தம்பி 73வது பிறந்தநாள் விழா மற்றும் 80வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கௌரவிக்கும் வகையில் திருநெல்வேலி மண்டலத்தின் பவ்டா கிளைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பவ்டா நிறுவனத்தின் பொதுமேலாளா் ஹரிச்சந்திரன் தலைமைதாங்கினார். தென்காசி வட்டார பொது மேலாளா் பகவதிநீலகண்டபிள்ளை முன்னிலைவகித்தனா். கடையநல்லுார் கிளை மேலாளா் க. ஹரிஹரன் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து கடையநல்லுார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பயனாளிகளுக்கு ரூபாய் மூவாயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து உணவு பொருட்கள், சில்வர் பாத்திரங்கள், மற்றும் போர்வை உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூத்த குடிமக்கள் அனைவரும் பவ்டா குழுமத்தின் நிறுவனருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ஆசியும் தெரிவித்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை மடத்துபட்டி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை மேற்பார்வையாளா் மந்திரா & பவ்டா கிளை மேலாளா் க.ஹரிஹரன் மற்றும் களப்பணியாளா்கள் பிரகாஷ், கணக்கர் மாரியம்மாள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *