பாவூர்சத்திரத்தில் த.வெ.கவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
1 min read
T.V. poets celebrate by bursting crackers at Pavurchatra
6.5.2026
தமிழக சட்டமன்ற தேர்தலில்
தவெக வெற்றியை யொட்டி பாவூர்சத்திரத்தில் த.வெ.கவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டினர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இதையடுத்து தென்காசி மத்திய மாவட்ட த.வெ.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் பாவூர்சத்திரத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்;கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், சரவணன், ஜூடு, மாரியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.து.ஜெரி, பாலா(எ) பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.