June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல் அமைச்சராக பதவி ஏற்றார் விஜய்

1 min read

Vijay takes oath as Chief Minister

10.5.2026
சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு தமிழக முதல்வராக ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைத்தது.
புதிய அரசு பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. கோட் சூட் அணிந்து, தமிழக முதல்வராக, இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார்.
அவருக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜோசப் விஜய் என்னும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்று கொண்டார் விஜய். அவர் ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போது அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். விசில் சத்தம் விண்ணை பிளந்தது.
தமிழகத்தில் ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, இதுவரை, 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில், 13வது முதல்வராக விஜய் பதவியேற்றார்.

முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து விஜய் காரில் இருந்த படியே கை அசைத்தார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து, பதவியேற்பு விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தார் விஜய்; அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது இதுவே முதல் முறை.
செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விஜய் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா, நடிகை திரிஷா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர். விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *