June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணியை முதல்-அமைச்சர் விஜய் சந்தித்து ஆசி பெற்றார்

1 min read

Chief Minister Vijay meets MK Stalin, Vaiko, Anbumani and receives their blessings

11.6.2026
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
அந்த வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை
முதல் -அமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக அரசியலில் இந்த நடைமுறை ஒரு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என தெரிவித்தார்.


இதனை அடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்தார். அவரிடம் பொன்னடை போர்த்தி வாழ்த்து பெற்றார். அருவடைய மகன் துரை வைகோ வாசல்வரை சென்று வரவேற்றார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் விஜயுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.


வைகோவை தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். முதல்-அமைச்சர் விஜய்யை அன்புமணி ராமதாசும், அவரது மனைவி சவுமியா அன்புமணியும் வாசலுக்கே நேரில் சென்று வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாசிடம் முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். பின்னர், அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *