July 2, 2026

Seithi Saral

Tamil News Channel

ஏணியில் ஏறும்போது தவறிவிழுந்து பெண் பலி

1 min read

Woman dies after falling while climbing ladder

14.5.2026
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்த ஜேசுராஜ் மகள் அமுதா (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்ததோடு, அவருக்குத் தீவிர வலிப்பு நோயும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று காலை அமுதா வீட்டின் ஏணி வழியாக மாடிக்கு ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நிலைகுலைந்த அவர் ஏணியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *