மூன்று நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி டெல்லி வந்தார்
1 min read
Japanese Prime Minister Takaichi arrived in Delhi for a three-day visit
1.7.2026
இந்தியாவில் மூன்று நாள் அரசு முறைப்பயணம் மேற்கொள்வதற்காக, ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இன்று டெல்லி வந்தார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில், பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா – ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார நல்லுறவை வலுப்படுத்தும் 10 ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
அப்போது இந்தியா வரும்படி ஜப்பான் பிரதமருக்கு மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி மூன்று நாள் பயணமாக இன்று டெல்லி வந்தார். டெல்லியில் நடைபெறும் 16வது இந்தியா – ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் சனே பங்கேற்க உள்ளார்.