வீட்டின் மேல் விமானம் விழுந்ததில் 2 பேர் பலி
1 min read
2 killed as plane crashes into house
15.5.2026
சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள அக்ரான் நகரின் குடியிருப்பு ஒன்றின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்திய நேரப்படி, இன்று அதிகாலை 1.30 மணியளவில் அமெரிக்காவின் அக்ரான் ஃபல்டன் என்ற விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பைப்பர் பிஏ-28 என்ற சிறிய ரக விமானம் சில நிமிடங்களிலேயே கேன்டர்பரி சர்க்கிள் பகுதியின் ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிஏ-28 என்ற எஞ்சின் விமானம் மற்றும் அந்த வீடும் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.
விமானம் மோதிய வீட்டில் இருந்த தம்பதியினரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். விமானத்தில் பயணித்த இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சிலர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் கூட்டாட்சி விமான போக்குவரத்து நிர்வாகம் ஆகியோர் இணைந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.