June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் 20-ந் தேதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம்

1 min read

Drugstores to go on strike across the country on the 20th

15.5.2026
அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரி வித்திருப்பதாவது:-
முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளது. முறையான சரிபார்ப்பு இன்றி மருந்துகள் விநியோகிக்கப்ப டுவதால், ஒரே மருந்துச் சீட்டைப் பலமுறை பயன்படுத்தும் அவல நிலை காணப்படுகிறது.

இது ஆன்டிபயாடிக், போதை தரக்கூடிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதற்கு வழிவகுக்கிறது. ஆன்லைன் நிறுவனங்கள் மருந்து விதிகளை மீறி வருகின்றன. இதனால் மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால்மருந்தகங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்படும். இதனை கண்டிக்கும் விதமாக இந்தியா முழுவ தும் 20-ந் தேதி மருந்துக்கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *