தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது ஏன்? – அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் பதில்
1 min read
Why did you support Thaweka? – AIADMK MLA Leema Rose’s response
15/5/2026
லால்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொகுதி வளர்ச்சிக்காவும் நாங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளோம். புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி படிக்கும் மாணவ செல்வங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறார். இதற்கு முதல்வர் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். சிங்கப்பெண் திட்டத்தையும் வரவேற்கிறோம். மகளிருக்கு மாதம் ஆயிரம் கொடுத்து இருப்பதையும் வரவேற்கிறோம்.
ரூ.2,500 கொடுப்பதற்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்று முதல்வர் கூறியிருக்கிறார். 717 டாஸ்மாக் கடைகள் மூடியிருக்காங்க..அதுவே மகிழ்ச்சியை தருகிறது. குடும்ப பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கட்சியை ஒன்று சேர்க்கத்தான் ஏற்பாடு நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் ஒன்று சேர்த்துவிடுவோம்” இவ்வாறு அவர் கூறினார்.