பூலாங்குளம் – ஆண்டிப்பட்டி ராமர் கோயில் திருவிழா கொடியேற்றம்
1 min read
Poolangulam – Andipatti Rama Temple Festival Flag Hoisting
17.5.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பூலாங்குளம் ஊராட்சி அயோத்தியாபுரிபட்டணம் (ஆண்டிப்பட்டி) கிராமத்தில் உள்ள ராமர் கோயில் திருவிழாவுக்காக இரு தரப்பினர் ஒன்றிணைந்து கொடியேற்றம் நடத்தினர்.
இந்த கிராமத்தில் உள்ள ராமர் கோயில் திருவிழா ஒருங்கிணைந்து நடைபெற்று வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு முறை கோயில் திருவிழா நடைபெற்று வந்தது.
ஆண்டுகள் பல சென்ற பின்னர் இரு தரப்பினரும் தற்போது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து திருவிழா கொண்டாட முடிவெடுத்தனர். இதையடுத்து வரும் 22 ஆம் தேதி கோயில் திருவிழா தொடங்குகிறது. இதற்கான கொடியேற்ற நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இரு தரப்பினரும் இணைந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.