கடையம் திருவள்ளுவர் கழக மாதாந்திர கூட்டம்
1 min read
Kadayam Thiruvallur kazhaka Meeting
18/5/2026
கடையம் திருவள்ளுவர் கழகத்தின் மாதாந்திர சிறப்பு கூட்டம் 17.5.2026(ஞாயிற்றுக்கிழை ) கடையம் வடக்கு தேர் தெருவி்ல் உள்ள கே.எஸ்.எஸ்.சிற்றரங்கில் நடந்தது. திருவள்ளுவர் கழகத் தலைவர் தமிழ்த்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார்.
சேவாலயாவின் கடையம் செல்லம்மா பாரதி கற்றல் மைய மாணவியர் திருக்குறள் கடவுள் வாழ்த்து பாடினர்.
சே.அறிவுடைநம்பி ஒரு திருக் குறளை கூறி விளக்கம் சொன்னார்.
“பண்புடையார் பட்டுண்டு உலகம்” என்ற தலைப்பில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா சிறப்புரை ஆற்றினார்.
திருவள்ளவர் கழக செயலாளர் க.சோ.கல்யாணிசிவகாமி நாதன் வரவேற்புரை ஆற்றியதோடு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்,
சிறப்பு விருந்தினருக்கு திருவள்ளுவர் கழகத் தலைவர் ஆ.சேதுராமலிங்கம் பொன்னாடை போர்த்தினார். பொருளாளர் இந்திரஜித் நினைவு பரிசாக புத்தகம் வழங்கினார். கடவுள் வாழ்த்து பாடிய மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருவள்ளுவர் கழக நிர்வாகி பெ.சின்னச்சாமி நன்றி கூறினார். அனைவருக்கும் க.சங்கரநாராயணன் இரவு விருந்து அளித்தார்.
-தகவல் இன்பசேகரன்