June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.60% தேர்ச்சி

1 min read

95.60% pass rate in 10th standard public examination in Tenkasi district

20.5.2026
2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நேற்று (20.05.2026) இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 226 உயர் / மேல்நிலைப்பள்ளி களைச் சார்ந்த 8865 மாணவர்களும், 9303 மாணவிகளும் மொத்தம் 18168 மாணாக்கர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அவ்வாறு தேர்வு எழுதியவர்களில் 8284 மாணவர்களும், 9084 மாணவிகளும் மொத்தம் 17368 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தென்காசி மாவட்டம் 95.60% ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தைப் பெற்று மாநில அளவில் 18 ஆம் இடம் பிடித்துள்ளது. தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட 226 உயர் மேல்நிலைப் பள்ளிகளில் 21 அரசுப்பள்ளிகள் உட்பட மொத்தம் 93 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரேணுகா அவர்கள் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *