கல்லூரணி திருமண மண்டபத்திற்கு ரூ.5 லட்சம் பொருட்கள்- எம்எல்ஏ வழங்கினார்
1 min read
MLA donates Rs. 5 lakh worth of items to Kallurani wedding hall
20.5.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில் திருமண மண்டபத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சேர்,டேபிள் மற்றும் கட்டிடப்பணிக்கு சிமெண்ட் வழங்கிய தென்காசி எம்.எல்,ஏ. டாக்டர் கலைகதிரவனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் யூனியனுக்குட்பட்ட கல்லூரணியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்திற்கு ரூ.5 லட்;சம் மதிப்பிலான சேர், டேபிள்கள் மற்றும் கட்டிடப்பணிக்கு சிமெண்ட் மூடைகள் வழங்கிய தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைகதிரவனுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கல்லூரணி ஊர் பொதுமக்கள் சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையிலும், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை முன்னிலையிலும், நிர்வாகிகள் சந்திரன், அழகர், வேல்சாமி, விஜயன், சேர்மதுரை, தங்கப்பாண்டி, சேர்மசெல்வன், வைகுண்டராஜா, பூதத்தான், கலைமகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆளுயர மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், மாநில திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, உட்பட பலர் கலந்து கொண்டனர்.