முத்துமாலைபுரம் மாலை நேர படிப்பகத்தில் சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்
1 min read
C.P.A. Adhithanar’s Memorial Day at the Muthumalaipuram Evening Study Center
24.5.2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மாலைநேர படிப்பகத்தில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 45 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு, மாணவ, மாணவிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே முத்துமாலைபுரம் கிராமத்தில் தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆதிநாராயணன் -சந்திரலீலா நினைவு மாலை நேர படிப்பகம் அமைந்துள்ளது.
இப்படிப்பகத்தின் சார்பில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 45வது நினைவு தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்பட்டது.
அப்படிப்பகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ‘மூத்தவர்களை மதிப்பது, நன்றாக படிப்பது, விடாமுயற்சியுடன் உழைப்பது” போன்ற கருத்துக்களை முன்னெடுத்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன் கோபி பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.