முக்கூடலில் கஞ்சா பதுக்கிய 5 பெண்கள் உட்பட 7 பேர் கைது
1 min read
7 people, including 5 women, arrested for storing cannabis in a three-car garage
24.5.2026
முக்கூடலில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கிய 5 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்ததோடு, 12 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் போதை பொருட்கள் தடுப்பு படை அமைக்கப்பட்டது.
தமிழக டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் அந்தெந்த மாவட்ட எஸ் பிக்களின் தலைமையில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப் டுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் முக்கூட லில் வீடு ஒன்றில் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று முக்கூடல் அண்ணாநகரில் உள்ள பவர் சங்கீதா என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடு பட்டனர். இதில் கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பவர் சங்கீதா, ஆர்த்தி (வயது 22), ரசூல் பாத்திமா (வயது 40), விஜயா (வயது 19), மும்பையை சேர்ந்த ஜெய் பூர்நிஷா, குஜராத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன், வீரவ நல்லூரைச் சேர்ந்த இசக் கிமுத்து ஆகிய 7 பேர்களை
போலீசார் கைது செய்த தோடு 12கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து முக்கூடல் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ‘கைதான பவர் சங்கீதா மும்பை யில் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் தனது சொந்த ஊரான முக்கூடலுக்கு வந்துள்ளார். பவர் சங்கீதா மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 7 பேரும் கஞ்சா யாரிடம் இருந்து வாங்கி வந்தனர்?, யார், யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த னர்?, கஞ்சா விற்பனையில் மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து 7 பேரிடம் தனித்தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.