கர்நாடகாவில் சிப்பி சேகரிக்கச் சென்ற 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி
1 min read
8 people drown in river in Karnataka while collecting oysters
24.5.2026
கர்நாடகாவில் சிப்பி சேகரிக்கச் சென்ற போது, ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷிராலியில் உள்ள சாரதாஹோலே பகுதியைச் சேர்ந்த 14 பேர் கார்வார் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரா ஆற்றில் சிப்பிகளை சேகரிக்கச் சென்றனர். அனைவரும் ஆற்றில் இறங்கிய நிலையில், திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால், அவர்களில் பெரும்பாலானோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமாக அறிவித்தார்.