June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 18 போலீசார் நியமனம்

1 min read

18 police officers appointed to the Lioness Special Task Force

30/5/2026
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற த.வெ.க. தலைவர் விஜய், முதல் நாளில் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம். ஆனால், சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தனியாக போலீசார் நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த போலீசார் அந்த பணிக்கு பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது.

நேற்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்திற்கு 18 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசாரை நியமித்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *