June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

1 min read

AIADMK executives in Nellai leave with a cage

30.5.2026
நெல்லையில் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகி தவெகவில் இணைந் துள்ளனர். இதனால் அதி முகதொண்டர்கள் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகதோல் வியை தழுவி 47 இடங்களை மட்டும் பிடித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுக வின் முக்கிய தலைவர்கள் சிலரும் தோல்வி அடைந்தனர்.

இதையடுத்து அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் அதிமுக விலிருந்து விலகி நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வுக்கு ஆதரவளித்தனர். இதையடுத்து வேலுமணி உள்ளிட்ட 25 பேரையும் கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமாரவேல்,
பெருந்துறை ஜெயக்குமார். தாராபுரம் சத்யபாமா, அம்பை இசக்கிசுப்பையா உள்ளிட்ட 4 பேர் அதிமுக விலிருந்து விலகியதோடு, தங்களின் எம்எல்ஏக்கள் பத வியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதற்கிடையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மீது கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

தங்களுக்கு மூன்று பங்கு எம் எல்ஏக்கள் ஆதரவு இல்லா தால் கட்சித்தாவல்தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் எம் எல்ஏ பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் மீண்டும் எடப்பாடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே அதிமுக விலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி தவெகவில் சேரும் படலம் தொடரு கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *