June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

உத்தேச பட்டியல்: 8 வது ஊதியக் குழுவில் 400 சதவீதம் சம்பளம் உயர்வு

1 min read

Proposed list: 400 percent salary hike in the 8th pay group

30/5/2026
இந்தியாவில் கடந்த 1946-ம் ஆண்டு தொடங்கிய மரபை தொடரும் விதமாக, பொதுவாக ஒவ்வொரு பத்து ஆண்டுக்கும் ஒருமுறை என ஏழு ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 70 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம், படிகள் மற்றும் சலுகைகளை மறுஆய்வு செய்வதற்கும் திருத்துவதற்கும் இந்திய அரசால் 3 நவம்பர் 2025 அன்று 8வது ஊதியக் குழு அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது.

8வது ஊதியக் குழுவு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் 2027-ம் ஆண்டின் நடுவில் ஊழியர்களின் மாதாந்திர சம்பளப் பட்டியல்களில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைவராகவும், பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் பங்கஜ் ராய் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

அதன்படி தற்போது உத்தேச சம்பளப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஊதிய அணி நிலை 1 – ரூ.18,000 இருந்து – ரூ.32,000 முதல் 69,000 வரையும்,

நிலை 2 – ரூ.19,900 இருந்து – ரூ.36,000 முதல் 76,000 வரையும்,

நிலை 3 – ரூ.21,700 இருந்து – ரூ.39,000 முதல் 83,000 வரையும்,

நிலை 4 – ரூ.25,500 இருந்து – ரூ.46,000 முதல் 97,000 வரையும்,

நிலை 5 – ரூ.29,200 இருந்து – ரூ.53,000 முதல் 1.11 லட்சம் வரையும்,

நிலை 6 – ரூ.35,400 இருந்து – ரூ.64,000 முதல் 1.35 லட்சம் வரையும்

நிலை 7 – ரூ.44,900 இருந்து – ரூ.82,000 முதல் 1.71 லட்சம் வரையும்

நிலை 10 – ரூ.56,100 இருந்து – ரூ.1.02 லட்சம் முதல் 2.15 லட்சம் வரையும்

நிலை 13 – ரூ.1,23,100 இருந்து – ரூ.2.25 லட்சம் முதல் 4.71 லட்சம் வரையும்

நிலை 18 – ரூ.2,50,000 இருந்து – ரூ.4.57 லட்சம் முதல் 9.57 லட்சம் வரையும் சம்பள நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *