June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

103-வது பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

1 min read

103rd Birthday: M.K. Stalin pays homage at Karunanidhi’s memorial

3.6.2026
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. தி.மு.க. சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.

அவருடன் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் பெரியார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உரு வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த 3 தலைவர்களின் சிலைகளை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *