June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

“கருணாநிதியின் பிறந்த நாளில் எனது வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்..” – முதல்-அமைச்சர் விஜய் பதிவு

1 min read

“I pay my respects on the artist’s birthday..” – Chief Minister Vijay’s post

3.6.2026
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் தனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிப்பதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *