ஐ.நா. பொதுச் சபையின் 81-வது அமர்வின் தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் தேர்வு
1 min read
Bangladeshi Minister elected as President of the 81st Session of the UN General Assembly
3/6/2026
செப்டம்பர் மாதம் தொடங்கவிருக்கும் 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையின் 81-வது அமர்வை வழி நடத்த ரஹ்மானும், சைப்ரஸின் பன்முகத்தன்மைக்கான சிறப்புத் தூதர் ஆண்ட்ரியாஸ் கக்கோரிஸும் போட்டியிட்டனர்.
தற்போதைய பொதுச் சபை தலைவரும், ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான அனலெனா பேர்பாக் இடமிருந்து அவர் பொறுப்பேற்கிறார். பேர்பாக், இந்த அமைப்பின் 80 ஆண்டு கால வரலாற்றில் ஐந்தாவது பெண் தலைவர் ஆவார்.
ரஹ்மான் கடந்த பிப்ரவரியில் வங்கதேசத்தின் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றார்.
முன்னதாக, முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், ரோஹிங்கியா பிரச்சினைக்கான உயர் பிரதிநிதியாகவும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.