August 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில்‘அடையாள அட்டை இல்லை என்றால் மது இல்லை’

1 min read


‘No ID card, no liquor’ in Karnataka.

9.6.2026
கர்நாடகாவில் உள்ள பப்கள், மதுபான பார்கள், கிளப்புகள், உணவகங்கள் உள்ளிட்ட மதுபானம் வழங்கும் அனைத்து இடங்களிலும் நுழைவதற்கு, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை கட்டாயம் என அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, மதுபானம் வழங்கும் அனைத்து வகை இடங்களிலும் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிப்பதற்கு அல்லது மதுபானம் வழங்குவதற்கு முன்பு, அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்க்க வேண்டும் எனவும், இல்லையெனில் அந்த கடை அல்லது பார்களின் இயக்க உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மதுபான விடுதிகளின் நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில், இளம் வயதினரிடையே மது மற்றும் புகையிலைப் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *